தற்போதைய நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக நீர் பாவனையும் அதிகரித்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தொடர்பாடல் முகாமையாளர் சரத்சந்திர முதுபண்டா தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…