ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்காளர் அட்டைகளை சரிபார்க்கவும், வாக்காளர் அட்டை மாதிரியைப் பெற்றுக்கொள்ளவும் இணையவழி முறையை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கிணங்க, தேர்தல் ஆணைக்குழுவின் www.elections.gov.lk என்ற இனையத்தளத்திற்குள் உட்பிரவேசித்து தேருநர் பதிவு விபரம் தேடல் மூலம் வாக்களர் அட்டைகளை பார்வையிடலாம்.
வாக்களிப்பதற்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை இதுவரை பெறாத வாக்காளர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி குறிப்பிட்ட வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்கலாம்.
வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை கிடைக்காவிடில் அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி விநியோகிக்காமல் இருக்கும் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் அல்லது www.elections.gov.lk என்ற இனையத்தளத்திற்குள் உட்பிரவேசித்து தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்காளர் அட்டை மாதிரியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇