தென் அமெரிக்காவின் பல பகுதிகளில் பாரியளவு வறட்சி நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஈக்வடோரில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு மேல் அங்கு மழை பெய்யாததன் காரணமாகத் தண்ணீருக்குத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
அத்துடன் தென் அமெரிக்காவின் 15இற்கும் மேற்பட்ட நகரங்களுக்கு வறட்சி குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், குறித்த பகுதிகளில் நாளொன்றுக்கு 15 மணித்தியாலங்களுக்கும் மேல் மின் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல பகுதிகளுக்குக் காட்டுத்தீ பரவுவதற்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇