மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில், ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான 30.09.2024 அன்று நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இந் நிலையில், 59 என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 15.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇