இலங்கையில் 56 ஆயிரம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு வருவதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழு தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள குடும்பங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு பகுதியினர் பாதுகாப்பான ஊட்டச்சத்து பொருட்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇