இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான தமிழ் மொழிமூல மாவட்ட மட்ட விவாதப் போட்டிகள் 16.10.2024 அன்று மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது .
இவ் விவாதப் போட்டிகள் கைத்தொழில் அபிவிருத்தியில் அரசின் பங்களிப்பு போதுமானதா? போதாது? எனும் தலைப்பில் இடம்பெற்றது.
பாடசாலை மட்டத்திலிருந்தே தொழில் முயற்சியாண்மை கலாச்சாரத்தை இந்நாட்டில் உருவாக்கும் முகமாக பாடசாலை தொழில் முயற்சியாண்மை வட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இப்போட்டிகள் இடம்பெற்றன.
விவாதப் போட்டியில் மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி , மட்/பட்டிருப்பு ம.ம.வி, தேசிய பாடசாலை , மட்ட / புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை , ம ட் / R.K.M சிவானந்தா வித்யாலய தேசிய பாடசாலை , மட்/ பட்/ மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயம் , மட்/ வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை , மட்/புனித மிக்கேல் கல்லூரி ஆகிய பாடசாலைகள் பங்குபற்றின.
மேலும் போட்டியின் நடுவர்களாக கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீட மூத்த விரிவுரையாளர் திரு.கே.மதிசீலன் , வலயக் கல்வி வர்த்தக இணைப்பாளர் எம்.ரமேஷ் , தொழில் விருத்திச்சபை மாவட்ட காரியாலய கைத்தொழில் மேம்படுத்தல் உத்தியோகஸ்த்தர்களான நா. கோகுலதாஸ் , ச. ராஜீவ்சங்கர் மற்றும் கமகே ஈ.டி.யு. ஆகியோர் பணியாற்றினர்.
அத்தோடு இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பணிப்பாளர் , வலயக் கல்விப் பணிப்பாளர்கள் , திட்டமிடல் பணிப்பாளர்கள் , அதிபர்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇