2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பானது அறிக்கையொன்றின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய வருடமொன்றிற்கு 210 நாட்கள் பாடசாலைகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் 2025ஆம் ஆண்டிற்கான விடுமறை நாட்களை தவிர்த்தால் 181 நாட்கள் மாத்திரமே கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் 2025ஆம் ஆண்டிற்கான முலதாம் தவணை பரீட்சைக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇