உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 802 கிலோகிராம் எடையுடைய குறித்த இரத்தினக்கல்லின் பெறுமதி 15,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பதுளையில் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த இரத்தினக்கல், அறுகோண இரு பிரமிட்டு வடிவம் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.
இவ்வகையானது இயற்கையாக ஒளி ஊடுருவக்கூடிய நீல நிற கொருண்டம் என்ற படிகங்களைக் கொண்டுள்ளது.
கொருண்டம் என்பது மிக முக்கியமான இரத்தின வகைகளில் ஒன்றாகும். உலக வளங்களில் கொருண்டம் குடும்பத்தின், மிகப்பெரிய நீல கொருண்டம் இதுவாகும்.
இது உலகின் அரிதான இரத்தினங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇