மட்டக்களப்பில் அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டத்தின் வட கீழ் பருவ பெயர்ச்சி மழைக்கான தயார்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 30.10.2024 அன்று நடைபெற்றது .
மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் ஏ.எஸ் எம்.சியாத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவ பெயர்ச்சி மழைக்கான தயார்படுத்தல் நடவடிக்கையாக மாவட்ட மட்டத்தில், அனர்த்தத்திற்கு தயார்படுத்தல் மற்றும் அனர்த்த முன்னெச்சரிக்கை போன்ற பணிகளுக்கான முன்னாயத்த நடவடிக்கை தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது
இந்நிகழ்வில் மத்திய நீர்ப்பாசன திணைக்கள பெறியியலாளர் எம்.ஐ.எம்.இப்றாகிம், இலங்கை மின்சார சபையின் உயரதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள், மீன்படி, விவசாய நீர்ப்பாசன திணைக்களங்களின் அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் பிரதிநிதிகள், முப்படையினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇