மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட சத்திர சிகிச்சைப் பிரிவு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இந்திய அரசாங்கத்தின் நன்கொடை நிதியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிச்சைப் பிரிவு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலாரஞ்சினி கணேசலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற அங்குரார்ப்பண நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, விசேட விருந்தினர்களாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி பாலித்த குணரத்ன மகிபால, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுமார் 320 மில்லயன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத் தொகுதியில் 4 சத்திர சிகிச்சைக் கூடங்கள் காணப்படுவதுடன் அவற்றை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட சிறப்பு அதிதிகள் பார்வையிட்டதுடன், வைத்தியசாலை நிருவாகத்தினரால் உயர்ஸ்தானிகர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects