ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கும், 6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகப் பிரதமர் விளக்கமளித்தார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தரம் 1 முதல் தரம் 5 வரை சிங்கள மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 4,240

தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 2,827

தரம் 6 முதல் தரம் 11 வரை சிங்கள மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 11,274

தமிழ் மொழியில் 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்புவரை உள்ள ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 6,121

மேல் மாகாணத்தில் சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழி அரசப் பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையிலும், தரம் 6 முதல் 11 வரையிலும் பின்வரும் எண்ணிக்கையிலான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

தரம் 1 முதல் தரம் 5 வரை சிங்கள மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 1318

தரம் 6 முதல் தரம் 11 வரை சிங்கள மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 1325

தமிழ் மொழிமூல வெற்றிடங்களின் எண்ணிக்கை – 397

கொழும்பு கல்வி வலயத்தில் சிங்கள மொழி மூல மற்றும் தமிழ் மொழி மூல அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையிலும், தரம் 6 முதல் 11 வரையிலும் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை பின்வருமாறு குறிப்பிடப்பட்டது.

சிங்கள மொழிமூலம் தரம் 1 முதல் தரம் 5 வரையிலான ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 84

தமிழ் மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 85

தரம் 6 முதல் தரம் 11 வரை சிங்கள மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 226

தமிழ் மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை -140 என பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பாராளுமன்ற உரையில் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects