பனிக்குடம் மற்றும் பனிக்குட நீர் பற்றிய தகவல்….
ஒரு பெண் கர்ப்பத்தின் போது, கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையை சுற்றி ஒரு நீர்ப்படலம் இருக்கும். இந்த நீர்ப்படலம் தான் பனிக்குட நீர் அல்லது அம்னோடிக் திரவம் என்று அழைக்கப்படுகிறது.
பனிக்குட நீர் நிறமற்றது. இது வெள்ளையாகவோ அல்லது இளஞ்சிவப்பாகவோ இருக்கலாம். பனிக்குட நீர் அளவு சீராக இருந்தால் தான் குழந்தையின் சுவாசம் இயல்பாக இருக்கும். குழந்தை பாதுகாப்பாகவும் இருக்கும்.
ஒரு சில கர்ப்பிணிக்கு பனிக்குட நீர் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும். இது குறையும் போது குழந்தைக்கு பாதிப்புகளை உண்டாக்கும்.
பனிக்குட நீர் குறைவாக இருந்தால் என்ன ஆகும்?
- தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சிசுவின் நஞ்சுக்கொடியானது கர்ப்பப்பையோடு ஒட்டி கொண்டு விடும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு போக வேண்டிய ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போகும்.
- இதனால் குழந்தையின் மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம்.
- நுரையீரல் வளர்ச்சியிலும் குறை உண்டாகலாம். பிரசவத்துக்கு முன்னும் பின்னும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் போன்ற சிக்கல்கள் ஏற்படும். சமயங்களில் குழந்தைக்கு வளைந்த நிலையில் பாதங்கள் ஏற்படலாம்.
- குழந்தை பனிக்குட நீர் குறையும் போது நஞ்சுக்கொடியின் அழுத்தத்தால் குழந்தையின் முகத்தில் மாறுதல்கள் உண்டாகலாம்.
- பனிக்குட நீர் அதிகமாக குறைந்தால் அது அப்பெண்ணுக்கு அவசரமான மருத்துவ சிகிச்சை தேவை என்று சொல்லலாம்.
இது அப்பெண்ணின் கர்ப்பகாலத்தில் எந்த மாதத்தில் உண்டாகிறது என்பதை பொறுத்து பாதிப்புகள் தீவிரமாகவோ சிகிச்சைக்குரியதாகவோ இருக்கலாம்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇