இலங்கையின் தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் கடந்த மாதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி , கடந்த மாதம் 0.6 சதவீதம் அது உயர்ந்திருந்தது.
அதேநேரம் 2025 மே மாதத்தில் அது 0.5 சதவீதத்தில் அதிகரித்திருந்தது.
கடந்த மாதத்தில் மின்சார பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமையால், உணவு அல்லாத பணவீக்கம் அதிகரித்திருந்தது.
இதற்கிடையில், 2025 ஜூன் மாதத்தில், தேசிய உணவுப் பணவீக்கம் 0.8 சதவீதம் உயர்வடைந்திருந்தது.
வருடந்தோறும் அளவிடப்பட்ட உணவு அல்லாத பணவீக்கம் கடந்த மாதம் 2.8 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தது.
இதேவேளை, இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் அதன் இலக்கு நிலைக்குத் திரும்பும் என்று மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










