சீனா நாட்டின் உதவியில் உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு !

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சீனா மற்றும் இலங்கை நாட்டின் நட்புறவின் பயனாக ‘சீனாவின் சகோதர பாசம்’ என்னும் வாசகத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா நாட்டின் உதவியில் உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஜு யான்வேய், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பயனாளர்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects