சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 19 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று 26.12.2023 தேசிய பாதுகாப்பு தினம் அனுஸ்ட்டிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடுமுழுவதும் இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.
குறித்த நிகழ்வுகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் காலியில் இன்று இடம்பெறவுள்ளன.
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரழிவில் சிக்குண்டு 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கான ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, புதுக்குடியிருப்பு பகுதியிலும், முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்திலும், கள்ளப்பாடு பகுதியிலும் இந்த நிகழ்வுகள் இன்று இடம்பெற்றவுள்ளன.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇