Humedica நிறுவனத்தின் அனுசரனையில் வருமானம் குறைந்த குடும்பங்களிலிருந்து கல்வி பயிலும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் 19.12.2023 அன்று இடம்பெற்றது.
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரின் இணைப்பாக்கத்தில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் Humedica நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மற்றும் அந்நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇