மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் (20.02.2024) அன்று உதவி மாவட்டச் செயலாளர் ஜி. பிரணவன் தலைமையில் , முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வி. முரளிதரனின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் சகல பிரதேச செயலகங்களின் முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
இதன் போது மாவட்ட செயலகத்தின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திப்பிரிவின் மேற்பார்வையில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படும் , கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குப் பொதிகளுக்காக வழங்கப்படும் கூப்பன், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான “குரு அபிமானி” ஊக்குவிப்பு கொடுப்பனவு மற்றும் முன்பள்ளி சிறுவர்களுக்கான காலை உணவு போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இவர்களுக்கு முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம், இலங்கை சிறுவர் நல மருத்துவரகளின் கல்லூரி மற்றும் ஹேமாஸ் ஒளட் ரீச் மன்றம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள முன்பிள்ளைப் பருவ சிறுவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக “உங்கள் உடல் உங்களுடையது – வெளிநபர் எவரையும் கை வைக்க இடம் கொடுக்க வேண்டாம்” என்ற செய்தியை வழங்கும் சுவரொட்டிகளை முன்பள்ளிகளில் காட்சிப்படுத்துமாறு, கலந்து கொண்ட உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇