பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்ட காலம் இன்றுடன் (08.11.2024) நிறைவடைகிறது.
கடந்த ஒக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு நேற்றும் இன்றும் வாக்களிப்பதற்கான இரு விசேட தினங்கள் வழங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
அதற்கமைய, தாம் பணிபுரியும் மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தாத வாக்காளர்களுக்கு இன்றைய நாளில் தமது வாக்குகளை அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇