இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகர் வட மாகாண ஆளுநரை சந்தித்தார்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நியுசிலாந்து நாட்டின் இலங்கைக்கான துணை உயர்ஸ்தானிகர் அன்றூ ட்ரவலர் (Andrew Traveller), வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை 21.03.2024 அன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இச் சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் நியுசிலாந்து நாட்டின் இலங்கைக்கான துணை உயர்ஸ்தானிகர் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.

மாகாணத்தின் கல்வி, பொருளாதாரம், வாழ்வியல்நிலை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பிலும், முதலீட்டு வலயங்களை ஸ்தாபித்தல் தொடர்பிலும் ஆளுநரால் தெளிவுப்படுத்தப்பட்டது.

அத்துடன் புலம்பெயர் தேசத்து உறவுகளின் முதலீடுகளை வரவேற்பதாகவும் வடக்கு மாகாண ஆளுநர், உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects