நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கன்சிகா எனும் மாணவி தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்கள், மனித உடலின் உள் உறுப்புகள் பலவற்றின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகவும் குறைந்த நேரத்தில் கூறி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இவர் நுவரெலியா மாவட்டம் கந்தப்பொல ரிலாமுல்ல தொடக்கப் பள்ளியில் 5 ஆம் தரத்தில் பயின்று வருகிறார்.
குறித்த மாணவி, தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 24 நொடிகளில் கூறியுள்ளதுடன், மனித உடலின் உள் உறுப்புகள் 168 இன் பெயர்களைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 4 நிமிடங்களில் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாக வாணி ராஜா மற்றும் கண்டி மாவட்டத் துணைத் தலைவர் சந்திரமோகன் முன்னிலையில் நடைபெற்றது.
மாணவியின் முயற்சியை கண்காணித்த நடுவர்கள் அதை உலக சாதனையாக அங்கீகரித்தமை குறிப்பிடத்தக்கது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










