அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்குவதற்காகத் தயாராக விருப்பதாக அந் நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை , சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களைக் கருத்திற்கொண்டு பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கை அலுவலகத்தின் தொலைபேசி இலக்கங்கள் சேவையில் உள்ளன.
02.06.2024 அன்று மாலை 06.00 மணி முதல் பொலிஸ் தலைமையகத்தில் 24 மணித்தியால விசேட பிரிவு சேவையில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி, 011 2 42 18 20 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசேட நடவடிக்கை அறைக்குத் தொடர்புகொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், 011- 2 43 92 12, 011 – 20 130 36 அல்லது 011- 20 130 39 ஆகிய எண்களுக்கு அழைப்பதன் மூலமும் அனர்த்தங்கள் தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.
குறித்த விசேட செயற்பாட்டு அறையானது பொலிஸ் தலைமையகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் இயங்குவதுடன் அவசரகால நிலைமைகள் மற்றும் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇