இந்தியாவிலிருந்து அடுத்த வாரத்திற்குள் முட்டை இறக்குமதி செய்யப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.
30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் சந்தையில் நிலவும் முட்டையின் விலை மற்றும் கேள்விக்கு ஏற்ப முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.
முட்டைகள் இறக்குமதி செய்வதற்காக முட்டை மாதிரிகள் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
அவற்றைப் பரிசீலித்ததன் பின்னர் அதற்கு அனுமதி கிடைக்குமாயின் அதன் முற்கட்டமாக 3 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇