அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
USS Spruance என்ற கப்பல் இன்று (19.08.2024) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே குறித்த கப்பல் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சுமார் 160 மீற்றர் நீளம் கொண்ட இக் கப்பலில் மொத்தம் 338 பேர் பயணிக்க முடியும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர் நாளை (20.08.2024) இக் கப்பல் நாட்டை விட்டு புறப்பட உள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇