சுக வனிதையர் கிளினிக் தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றின் ஓர் அங்கமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட “இழப்பேனா உன்னை” எனும் குறும்பட வெளியீடு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி முரளீஸ்வரனின் தலைமையில் சதுர்முகம் கேட்போர் கூடத்தில் 12-11-2024 அன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது
கருப்பைக் கழுத்து மற்றும் மார்பக புற்று நோய் தொடர்பான இவ் விழிப்புணர்வு குறும்படம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளதுடன் குறித்த குறும்படத்திற்கான கதையை வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் எழுதியுள்ளதுடன், அதற்கான திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதி இயக்கியுள்ளார் குறுந்திரைச் செம்மல், இயக்குநர் கோடீஸ்வரன்.
இவ்வேலைத் திட்டத்திற்கான நிதி அனுசரணையை சமூக ஆர்வலர் மற்றும் வைத்திய கலாநிதி காந்தா நிரஞ்சன் வழங்கியுள்ளார்.
இக்குறும்படத்தில் வைத்தியர் குளோடியா ரதி ஜெயறூபன், வைத்தியர் உதயகுமார், வைத்தியர் பிரஷாந்தி லதாகரன், தீபா தேவசகாயம், தர்மிகா ஸ்ரீகாந்தராசா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளதுடன் ஒளிப்பதிவை புஸ்பகாந்தும், இசையை சங்கர்ஜனும் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிகழ்விற்கான ஊடக அனுசரணயை மனிதநேயத் தகவல் குறிப்புகள் (மதகு) ஊடகம் வழங்குவதுடன் இந்நிகழ்வை மதகு ஊடகத்தின் முகநூல் பக்கத்தில் நேரலையில் கண்டு களிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇