கொழும்பு பங்குச் சந்தையில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களும் 13.11.2024 அன்று 13,000 புள்ளிகளைக் கடந்துள்ளன.
ஜனவரி 31, 2022க்குப் பின்னர் முதன்முறையாக, கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 13.11.2024 அன்று 13,000 புள்ளிகளைக் கடந்துள்ளன.
அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 136.20 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
13.11.2024 அன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 13,125.19 புள்ளிகளாகப் பதிவு செய்யப்பட்டதன், மொத்த புரள்வு 6.9 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாகக் கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇