பாலி நாட்டுக்கான சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள எரிமலையில் இருந்து சாம்பல் துகள்கள் மற்றும் பாரியளவான புகை வெளியேறுவதன் காரணமாகவே இவ்வாறு விமான சேவைகள் இரத்தாகியுள்ளன.
இதன்படி, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பாலிக்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளன.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குப் பாலிக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஹொங்கோங், இந்தியா, மலேசியா, உள்ளிட்ட நாடுகளும் பாலிக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.
குறிப்பாக நேற்று முன்தினம் 22 சர்வதேச விமான சேவைகளும் 12 உள்நாட்டு விமான சேவைகளும் இரத்தானதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇