ஆசிய மன்றத்தின் நிதி அனுசரணையுடன் நியு அரோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்ட “பெண்கள் குரல் மற்றும் தலைமைத்துவம்” எனும் திட்டத்தின் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2023 வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட செயற்திட்டங்களின் அடைவுகளை அளிக்கை செய்யும் நிகழ்வு நியு அரோ நிறுவனத்தின் இணைப்பாளர் திருமதி உருத்திராதேவி ரவி தலைமையில் 15.11.2023 அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் கலந்து கொண்டதுடன், பிரதேச செயலாளர்கள், வைத்தியர் எம். ஜே.நௌபல், இலங்கை ஆசிய மன்றத்தின் சிரேஸ்ட திட்ட உத்தியோகத்தர் திருமதி குமாரி இட மகம, வலய கல்வி அலுவலகத்தின் சேவைக்கால பயிற்சி ஆலோசகர் மோகனதாஸ்,நியு அரோ நிறுவன கணக்காளர் திருமதி உருத்திரகுமார் மதிவதனி , நியு அரோ திட்ட உத்தியோகத்தர் திருமதி லதா மோகனராஜன் என பலரும் கலந்து கொண்டனர்.
பெண்களை வலுப்படுத்துதல், வன்முறைகளில் இருந்து பாதுகாத்தல் மற்றும் பெண்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் செயற்றிட்டங்களை இந்நிறுவனம் மேற்கொண்டுவருவதாக இதன் போது தெரிவிக்கப்பட்டது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇