அகற்றும் பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக” மாற்றி விநியோகிக்கும் வேலைத்திட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உலக சுற்றாடல் தினமான 05.06.2025 அன்று சிபெட்கோ நிறுவனம் அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம் முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

இத் திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka செயலகம் ஆகியவை இணைந்து செயல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில், இக் குப்பைத் தொட்டிகள் உக்கும் பொருட்கள் மற்றும் பொலிதீனை தனித்தனியாக இடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சிபெட்கோ முதல் கட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 150 பீப்பாய்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.

எதிர்காலத்தில் தேவைக்கேற்ப குப்பை மற்றும் பொலித்தீனை இடக்கூடிய பீப்பாய்களை வழங்க அந் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

இந் நிகழ்வில் Clean Sri Lanka செயலகத்தின் பணிப்பாளர் இசுரு அநுராத மற்றும் Clean Sri Lanka செயலகம் மற்றும் சிபெட்கோ அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே.ஏ.எஸ். ராஜகருணா, முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயுர நெத்திகுமாரகே, பதில் பிரதிப் பொது முகாமையாளர் சமந்த குணவர்தன, உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் Clean Sri Lanka செயலகத்தின் அதிகாரிகளும் பிரசன்னம்மாகினர்.

இதேவேளை, உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து, முத்துராஜவெல பகுதியில் 05.06.2025 அன்று மரம் நடுகை நிகழ்வொன்றையும் நடைமுறைப்படுத்தியது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects