நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கிரித்தலே மற்றும் கந்தளம ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதிக மழையினால் ஆறு வருடங்களுக்கு பின்னர் கிரித்தலே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மழையின் காரணமாக கந்தளம நீர்த்தேக்கமும் நேற்று (01) முதல் நிரம்பி வருகிறது.
இதன் காரணமாக தம்புள்ளை வேவல குளம் பிரதான வீதியினூடாக சிறியரக வாகனங்கள் பயணிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇