கண்களுக்கு கீழே கருவளையம்
- உணவில் பயன்படுத்தும் வெந்தயத்தில் ஒரு விதமான கெமிக்கல் தன்மை இருக்கும். வெந்தயத்தை 3 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து நன்றாக அரைத்து, கண்களை கழுவி சுத்தம் செய்த பின், கண்கள் மூடிய நிலையில், இமைகளின் மேல் பேக் போட வேண்டும். 20 நிமிடம் கழித்து கழுவி சுத்தம் செய்யலாம். இந்த முறையினை இரண்டு நாளைக்கு ஒருமுறை செய்தால் கருவளையம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கும்.
- அரைத்த வெந்தயத்தோடு கஸ்தூரி மஞ்சள் காய்ச்சாத பால் சேர்த்து கண்களில் பேக் போடலாம். அப்போது கண்களில் இருக்கும் சோர்வும் சேர்ந்தே குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.
- கற்றாழையின் தோல் நீக்கி, சின்ன சின்ன துண்டுகளாக எடுத்து, அத்துடன் பொடி செய்த சர்க்கரை, தேன் சேர்த்து, கண்களைச் சுற்றி தடவ வேண்டும். இதில் சர்க்கரை ஸ்க்ரப்பராக செயலாற்றி, முகத்தில் இருக்கும் டெட் செல்களை நீக்கும். தேன் கண்களுக்கு கீழிருக்கும் சுருக்கத்தைக் குறைக்கும்.
- கண் மற்றும் கழுத்தில் இருக்கும் கருவளையத்தை போக்கும் சக்தி உருளைக் கிழங்கில் நிறைந்துள்ளது. ஃப்ரெஷ் உருளைக்கிழங்கு, வெள்ளரி இவற்றை துண்டுகளாக்கி கண்களைச் சுற்றிலும் தடவலாம். தக்காளியினை மசித்தும் கண்களை சுற்றிலும் பேக் போடலாம்.
- முகத்தை ஸ்டீம் செய்யும்போது, சருமத்தில் உள்ள கண்களுக்குப் புலப்படாத துளைகள் திறந்துகொள்ளும். பிறகு முகத்தில் ரோஸ் வொட்டர் அப்ளை செய்யலாம். பிறகு சாதிக் காயை பொடியாக்கி, சர்க்கிள் அன்டி சர்க்கிள் முறையில் இரண்டு விரல்களால் கண்களை சுற்றி மெதுவாக ஸ்க்ரப் செய்ய, கண்களின் கீழிருக்கும் கருவளையத்தின் டெட் செல்கள் மறையும். பிறகு வெள்ளரியினை அரைத்து தடவி கண்களைச் சுற்றி மசாஜ் கொடுத்தல் வேண்டும்.
- மூன்று ஊற வைத்த பாதாமை அரைத்து, அத்துடன் எலுமிச்சைச் சாறு கலந்து, கண்களை டிஸ்யூ பேப்பர் கொண்டு மூடிவிட்டு, கண்ணைச் சுற்றி பேக் போட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து எடுத்துவிட்டால், கண்ணில் உள்ள கருவளையம் கட்டாயமாக நீங்கி இருக்கும்.
- தாமரை மலரின் இதழ் மற்றும் கற்றாழை ஜெல் இரண்டையும் எடுத்து, நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து அந்தக் கலவையினை ஃப்ரீஸர் பொக்ஸ் ஐஸ் ட்ரேயில் உறைய வைத்து, அதனை சிறிய துண்டில் வைத்து கட்டி கண்களைச் சுற்றி ஒத்தடம் கொடுத்தால், கருவளையம் மறைவதோடு, தாமரை மலர் பார்வைத்திறனை அதிகரிக்கும்.
இத்துடன்…
- ஒரு நாளைக்கு குறைந்தது 10 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும். தாகம் எடுக்கும் உணர்வு தோன்றும்போது தண்ணீரை தவறாமல் பருக வேண்டும்.
- தோலுக்கு தேவையான விட்டமின் கே, சி, இ நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகம் உணவாக எடுக்க வேண்டும்.
- சூரிய ஒளி காலை, மாலை வேளைகளில் நமது தோல்களில் படும்படி செய்தல் வேண்டும்.
அழகு நிலையங்களில் பைட்டோ தெரஃபி (phytotheraphy) முறையில் கருவளையத்தை நீக்குவார்கள். இதில் அரோமா ஒயில் பயன்படுத்தப்படுகிறது. அரோமா ஒயில் என்பது மரிக்கொழுந்து, செம்பருத்தி பூ, வெந்தயம் இவற்றில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய். இதனை கண்களை சுற்றித் தடவி, மசாஜ் கொடுப்பதால் 70 சதவிகிதம் கருவளையம் நீங்கிவிடும். இடைவெளி விட்டு இந்த தெரஃபியினை இரண்டு முறை எடுத்துக்கொண்டால், கருவளையத்துக்கு குட்பை சொல்லலாம்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇