10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடாத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் (19) நாளையும் (20) தகவல் சாளரம் ஒன்று நிறுவப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
இந்த சாளரம் இன்றும் நாளையும் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பாராளுமன்ற வளாகத்தில் திறந்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது, அனைத்து எம்.பி.க்களுக்கும் பயனுள்ள தகவல் ஆவணங்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் அடையாள அட்டைக்கு புகைப்படங்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் தொடர்பான கைரேகைகளை எடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர,
“அன்றைய தினம் இந்த எம்.பி.க்களுக்கு வந்து அல்லது ஒன்லைனில் எமக்கு தகவல் வழங்கி பதிவு செய்துக் கொள்ளலாம். கைரேகைகளை பதிவு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த வருடம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவர்கள் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாவர். இவர்களுக்கு பாராளுமன்றத்தில் நடைமுறை, நடத்தை, மரியாதை மற்றும் எவ்வாறு செயல்பட வேண்டும், குழுக்களின் வடிவம் மற்றும் விவாத விதிகள் மற்றும் அவர்கள் பின்பற்றும் முறைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்க மூன்று நாள் பயிலரங்கை ஏற்பாடு செய்துள்ளோம். நவம்பர் 25, 26 மற்றும் 27 திகதிகளில்.”
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇