2024 உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ள நிலையில், பரீட்சையை பிற்போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைகள் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2024ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை திட்டமிடப்பட்ட திகதிகளில் , அதனடிப்படையில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறும் என, பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇