வாகன இலக்கத் தகடுகளை விநியோகிக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பணத்தைச் செலுத்தி வாகன இலக்கத் தகடுகளைக் கொள்வனவு செய்ய முடியும்.
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக வாகன இலக்கத் தகடுகளின் பயன்பாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
அதன் பின்னர் தற்காலிக வாகன இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇