வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட ஆரையம்பதி மாவிலங்குத் துறைறையைச் சேரந்த 40 குடும்பங்களுக்கு நெதர்லாந்து நாட்டின் றோர்மொண்ட் தமிழ் கலாசார உதவி நற்பணி மன்றத்தின் நிதியுதவியில் ஒவ்வொன்றும் தலா நான்காயிரத்தி இருநூறு ரூபாய் பெறுமதி கொண்ட 40 பொதிகள் 04-12-2024 அன்று கிராம சேவைகள் உத்தியோகத்தரின் முன்னிலையில் வழங்கப்பட்டன.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் ஒருங்கிணைப்பிலும், ஆரையம்பதி பிரதேச செயலாளரின் வழிகாட்டலிலும் வழங்கப்பட்ட இந்தப் பொதியில் 5kg அரிசி, 3kg மா, 1kg பருப்பு, 500g, சீனி, 400ml தேங்காய் எண்ணை, 500kg சோயா, 600g சமபோஷ, 200g பால் மா, 100g தேயிலை, 400g உப்பு ஆகிய 10 அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கி இருப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பில் பல்வேறு மனிதாபிமானப் பணிகளை செய்துவரும் LIFT நிறுவனத்தினால் இந்த நெதர்லாந்து தமிழ் கலாசார உதவி நற்பணி மன்றத்தின் நிதியுதவியில் சிறுவர் இல்லங்களுக்கு மதிய உணவு வழங்குதல், குழாய்க்கிணறுகள் அமைத்தல், முதியோர் இல்லங்களுக்கான உதவி எனப் பல்வேறு உதவிகள் மாதந்தோறும் வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
.
.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇