நாட்டில் ஏற்பட்ட அசாதாரண மழை மற்றும் வெள்ளத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்து வீடு திரும்பிய சுமார் 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் UMRF (Universal Mind Rising Foundation) நிறுவனத்தினால் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அமிர்தகழி மற்றும் மட்டிக்களி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான அன்றாட தொழில் புரியும் வாழ்வாதாரத்தில் நலிவுற்ற 50 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடக்கிய உலர் உணவுப் பொதிகள் UMRF நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் ஸ்தாபகர் சி.லோகானன் தலைமையில் வழங்கப்பட்டன.
இவ் வேலைத் திட்டத்திற்கான கிராமம் மற்றும் பயனாளிகள் என்பன மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இதில் கிராம சேவகர் விமலசிறி மற்றும் UMRF நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇