வைத்தியர்களின் பரிந்துரையின்றி நோயாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்க வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன மருந்தக உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் 180 பில்லியன் ரூபாய் வரை ஔடதங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அவற்றில் பெருந்தொகையான பணம் நேயெதிர்ப்பு சக்தியாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇