பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுப்பதற்கான பொறுப்புணர்வைக் கட்டியெழுப்ப ஆண்களையும் இளைஞர்களையும் ஈடுபடுத்துதல் எனும் தலைப்பில் நவ்யோத்பாத சமூக அபிவிருத்தி நிறுவனத்தால் (FISD) நடாத்தப்பட்ட செயலமர்வானது 09.12.2024 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
இச் செயலமர்விற்கு FISD நிறுவனத்தின் பொதுச் செயலாளரும் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியருமான முகமது மஹீஸ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் விரிவுரையாளர் கே.கிருஷ்ணராஜ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) மற்றும் நவ்யோத்பாத சமூக அபிவிருத்தி நிறுவனம் (FISD) ஆகியன இணைந்து இச் செயலமர்வை முன்னெடுத்திருந்தனர்.
செயலமர்வில் பாலினம் மற்றும் ஆணாதிக்கம் அதன் தாக்கங்கள் போன்ற பல்வேறு தலைப்புக்களில் கலந்துரையாடப்பட்டதுடன் குழுச்செயற்பாடுகள் மூலம் தெளிவு படுத்தப்பட்டது.
FISD நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ASM.பாஹிம் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇