டெட் கொடுப்பனவு தொடர்பில் சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையில் 28.02.2024 அன்று இடம்பெற்ற கலந்துரையாடல் சாதகமாக முடிவடைந்ததாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சுகாதார செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக சுகாதார தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
இதன்போது குறித்த குழு தயாரித்த தொழில்நுட்ப அறிக்கை அங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சுகாதார அமைச்சர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை எனவும், சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடல் இன்று (01) காலை நடைபெறவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇