கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் இன்று (12.12.2024) வரலாற்றில் முதல் தடவையாக 14,000 புள்ளிகளைக் கடந்தது.
இன்றைய நாளில் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண்களும் 150.72 அலகுகளால் அதிகரித்ததுடன், அதற்கமைய இன்றைய வர்த்தகத்தின் முடிவில் அதன் பெறுமதி 14,035.81 அலகுகளாகப் பதிவானது.
இதேவேளை , S&P SL20 சுட்டெண் 42.80 புள்ளிகளால் அதிகரித்து இன்றைய வர்த்தகத்தின் முடிவில் 4,186.09 புள்ளிகளில் நிறைவடைந்தது.
மேலும், இன்றைய (12.12.2024) வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 7.35 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇