நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு (21.10.2025) 8.30 வரை அமுலில் காணப்படும் வகையில் குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கேகாலையில் ரம்புக்கன, தெஹியோவிட்ட, கேகாலை, அரநாயக்க, யட்டியந்தோட்டை மற்றும் மாவனெல்ல உள்ளிட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், கண்டி மாவட்டத்தில் உடபலாத்த, தொலுவ, பஹத்ததும்பர, உடுநுவர, தெல்தோட்ட மற்றும் பஸ்பாகே கோரலே போன்ற பகுதிகளுக்கும், கேகாலையில் வரகாபொல, ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய மற்றும் கலிகமுவ ஆகிய பகுதிகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










