கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா 2024 இல் ஆற்றுகைத் துறைக்கான வித்தகர் விருதினை தேவநாயகம் அலோசியஸ் (தேவ அலோசியஸ்) பெற்றார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் H.E.M.W.G. திசாநாயக்கவின் தலைமையில் 11.12.2024 அன்று திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இவ் இலக்கிய விழாவில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகரவும், சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் R.M.P.S. ரத்நாயக்கவும், கௌரவ விரந்தினர்களாக கிழக்கு மாகாண அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றும் தேவ-அலோசியஸ் 25 வருடங்களுக்கும் மேலாக ஆற்றுகை, குறும்படம், சினிமா, இலக்கியம் போன்ற துறைகளில் பங்களிப்பு செய்து வருபவர் என்பதும், இதற்கு முன்னதாக தேசிய ரீதியில் வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇