உத்தேச மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகளை சேகரிக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வரை பொதுமக்கள் தங்களது ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு மின்சாரக் கட்டணங்களை மாற்றமின்றி தொடர்வதற்கு இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் பரிந்துரைத்துள்ளது.
இந் நிலையில் , மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பொது மக்களிடம் கருத்துகளைக் கோரவுள்ளது.
பொதுமக்கள் தங்களது ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை Info@Pucsl.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 076 427 10 30 எனும் எண்ணுக்கு WhatsApp ஊடாக அனுப்பலாம்.
அதேநேரம், எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அலுவலகம் அல்லது மாகாண மட்டத்தில் நிறுவப்படும் இடங்களுக்கு சென்று வாய்மொழி மூலம் முன்மொழிகளை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பொதுமக்களின் கருத்துகள் ஆராயப்பட்ட பின்னர், மின் கட்டணம் தொடர்பான இறுதித் தீர்மானம் அடுத்த மாதம் 17ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇