இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள தொழிலாளர் இடைவெளியைக் குறைக்க உயர்நிலை பாடசாலை பட்டதாரிகளை தேவையான திறன்களுடன் உள்வாங்க வேண்டிய அவசரத் தேவையை தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் எடுத்துரைத்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் வருடாந்தம் சுமார் 20,000 வேலை வாய்ப்புகள் உள்ள போதிலும் போதிய பயிற்சி பெற்ற நிபுணர்களின் பற்றாக்குறை நீடிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 தகவல் தொழிநுட்பவியல் பட்டதாரிகள் அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளிவரும் அதே வேளையில், எஞ்சிய தொழிலாளர் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான திறன்களுடன் உயர்தரத்தை முடித்த இளைஞர்களை உள்வாங்க மேலதிக முயற்சிகள் தேவை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழிற்சங்க சம்மேளனத்தின் (FITIS) கல்விப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சர்வதேச கல்வி மன்றம் – 2023’ என்ற தலைப்பில் நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇