மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் புதிய ஆயுர்வேத வைத்திய சாலை பிரதேச மக்களின் தேவை கருதி நேற்று (19) திகதி திறந்து வைக்கப்பட்டது.
கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி பகுதியில் வாரத்திற்கு ஒருமுறை சிகிச்சை வழங்கும் நோக்கில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் உட்பட சுகாதாரத் துறை அதிகாரிகள், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇