சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பிற்கமைய வீடின்றி உள்ளவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன் பிரகாரம் தகவல்களை திரட்டும் பணிகள் 18.12.2024 அன்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இடம்பெற்றதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கணக்கெடுப்பு பணிகளை இம்முறை நிறைவு செய்யவுள்ளதுடன் எதிர்வரும் 5 தினங்களுக்கு கணக்கெடுப்பு செயற்பாடுகளை புதுப்பிக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7ம் திகதி முதல் குடியிருப்புகளைக் கொண்டுள்ளவர்கள் மற்றும் குடியிருப்புகளின் தகவல்களை திரட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிலையில் தகவல்களை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇