மண்முனை மேற்கு பிரதேச செயலகம் நடாத்திய நடமாடும் சேவை புதுமண்டபத்தடி கிராம சேவகர் அலுவலகத்தில் 14.02.2024 அன்று நடைபெற்றது.
கிராம அதிகாரிகளின் நிருவாக உத்தியோகத்தர் கோமளேஸ்வரன் ஒழுங்கமைப்பில், பிரதேச செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நடமாடும் சேவையில், முதியோருக்கான உத்தேச பிறப்பு பதிவு பெறல், பொலிஸ் முறைப்பாடு பெறல், தேசிய அடையாள அட்டை விண்ணப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டது.
நலன்புரி நன்மைகள் கொடுப்பனவை பெறும் சிலர் அடையாள அட்டை இல்லாததன் காரணத்தினால் வங்கிகளில் இருந்து பணம் பெறுவதில் சிக்கல்களை எதிர்நோக்குவதால் இதனை கவனத்தில் கொண்டு, பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தியின் ஆலோசனையில் இந் நடமாடும் சேவை நடைபெற்றது.
இலுப்படிச்சேனை, கொத்தியாபுலை, நாவல்தோட்டம், புதுமண்டபத்தடி, கரையாக்கந்தீவு, மண்டபத்தடி போன்ற கிராமங்களிலிருந்து சேவையைப் பெற மக்கள் வருகை தந்திருந்தனர்.
இந் நடமாடும் சேவையானது வவுணதீவில் மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇