மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த தேவையுடைய சுமார் ஐம்பது மாணவர்களுக்கு “சுவிஸ் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் ஆலய நிர்வாகத்தினரின்” பூரண நிதி அனுசரனையில் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் முன்னிலையில் UMRF ஸ்தாபகர் சி.லோகானன் தலைமையில் 20.12.2024 அன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்விற்கான மாணவர்களை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் மாவட்ட செயலாளரின் பரிந்துரைக்கு அமைய தெரிவு செய்து வழங்கியிருந்தனர். இதில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆறு பாடசாலைகளைச் சேர்ந்த தரம் 09 மற்றும் தரம் 10 இல் கல்விகற்கும் 50 மாணவர்கள் பயன்பெற்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇