தற்போது பயன்படுத்தப்படும் புகையிரத பயணச்சீட்டுக்கு பதிலாக முற்பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளக்கூடிய அட்டை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இலத்திரனியல் பயணச்சீட்டு திட்டத்தின் கீழ் குறித்த அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஊடாக பயணச் சீட்டை பெற்றுக் கொள்வதற்கான இலத்திரனியல் பயணச்சீட்டு திட்டம் கடந்த செப்டெம்பர் மாதம் புகையிரதத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் முற்பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளக்கூடிய புதிய அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த அட்டையை வைத்திருப்பவர்கள் சகல தொடருந்து நிலையங்களின் ஊடாகவும் பயணிப்பதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என புகையிரதத் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇