மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கான சாத்திய வள களவிஜயம் இடம் பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் கீழ் மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர் ச.யோகராஜா மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலன் தலைமையிலான குழுவினர் சாத்திய வள ஆய்வினை மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தீவினில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கான சுற்றுலாத்தளம் ஒன்றை அமைப்பதற்கான ஒரு செயற்திட்டமாக இது நடைபெற்றது.
மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முதலீட்டாளர்களுடன் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக சாத்திய வள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ் விஜயத்தின் போது தனியார் முதலீட்டாளர்களும் மாவட்ட சுற்றுலாத் துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.விவேகானந்தராஜ், மண்முனை மேற்கு காணி உத்தியோகத்தர் கே.சுரேஸ்காந்தன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇