அஸ்வெசும நலன்புரி பயனாளர்களுக்கு இதுவரையில் செலுத்தப்படாத நிலுவைத் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் முதலாம் கட்டத்தில் தகுதிபெற்ற இரண்டு இலட்சத்து 12, 423 குடும்பங்களுக்கான நிலுவைத் தொகை , இன்றைய தினம் (27.12.2024) வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇